உள்ளூர் செய்திகள்

தேசிய தர வரிசை பட்டியலில் பி.எஸ்.ஜி.க்கு 10ம் இடம்

கோவை: கல்வி நிறுவனங்களுக்கான என்.ஐ.ஆர்.எப். பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. கல்லுாரிகளுக்கான பிரிவில், தேசிய அளவில் பி.எஸ்.ஜி.கலை அறிவியல் கல்லுாரி, 10வது இடம் பிடித்துள்ளது.கல்லுாரி செயலாளர் கண்ணையன், முதல்வர் (பொ) செங்குட்டுவன் கூறியதாவது:பி.எஸ்.ஜி.கலை அறிவியல் கல்லுாரி குடும்பத்தின், அயராத உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு கிடைத்த சான்று இது. தேசிய அளவில் உயர்கல்வி நிறுவனங்களை மதிப்பிடும் என்.ஐ.ஆர்.எப்.,ன் அனைத்து அளவுகோல்களிலும், குறிப்பிடத்தக்க வளர்ச்சியை, எங்கள் கல்லுாரி அடைந்துள்ளது.ஆசிரியர்களின் தகுதிகள், ஆராய்ச்சி வெளியீடுகள் மற்றும் மாணவர்களின் வேலைவாய்ப்பு முடிவுகள் ஆகியவற்றில், சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளோம். புதுமை மற்றும் புத்தாக்க மையங்கள் மூலம், மாணவர்களின் தொழில்முனைவு உணர்வை வளர்த்திருக்கிறோம்.கல்லுாரியின் வேலைவாய்ப்பு பிரிவு, மாணவர்களுக்குத் தேவையான திறன்களை வளர்த்து, உள்நாடு மற்றும் சர்வதேச நிறுவனங்களில், வேலைவாய்ப்பை பெற்றுத் தருகிறது.இந்தியாவின் சிறந்த ஐந்து கல்லுாரிகளில் ஒன்றாக, இடம் பெறுவதே எங்கள் இலக்கு. இதை அடைய, பல திட்டங்களை வைத்துள்ளோம். என்.ஐ. ஆர்.எப்., தர வரிசை பட்டியலில், விளையாட்டையும் ஒரு அளவுகோலாக பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்