உள்ளூர் செய்திகள்

கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி சாதனை

கள்ளக்குறிச்சி: கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 156 மாணவர்களும் வெற்றி பெற்று, பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி சாதனை படைத்துள்ளது. இப்பள்ளி மாணவர் வெற்றிவேல் 600க்கு 583 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.அதே போல், மாணவி விஜயலட்சுமி 582 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், மாணவிகள் பவித்ரா, காயத்ரி ஆகியோர் தலா 581 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பிடித்தனர். இது தவிர, மாணவி விஜயலட்சுமி இயற்பியல் பாடத்திலும், மாணவர் முகுந்தன் கணினி அறிவியல் பாடத்திலும் சென்டம் மதிப்பெண் பெற்றுள்ளனர்.சிறந்த மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளி நிறுவனர் பார்வதியம்மாள் மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து, கோப்பை வழங்கி கவுரவித்தார். அப்போது, பள்ளியின் சேர்மன் ரவிக்குமார், செயலாளர் சாந்தி ரவிக்குமார், இயக்குநர் சக்திரவிக்குமார், முதல்வர் பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்