உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பாடும் பறவைகள்-2014 பாட்டு போட்டி

சிவகாசி: சிவகாசி ஸ்பார்க்ளர் ரோட்டரி சங்கம் சார்பில் விருதுநகர், மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பாடும் பறவைகள்-2014 பாட்டு போட்டி நடைபெற்றது. பல்வேறு சுற்றுக்களாக போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்கள் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இறுதி போட்டியில் தேர்வாளர்களாக புலவர் கல்யாண சுந்தரம், நடுவர்களாக ராககீதம் ராகவன், ஆடிட்டர் லட்சுமி ரூபா பங்கேற்றனர். மாணவர் பிரிவில் விருதுநகர் ஸ்ரீவித்யா இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் விஜய்கிஷன், மாணவியர் பிரிவில் சிவகாசி எஸ்.எப்.ஆர்., கல்லூரி மாணவி கோகிலா, டூயெட் பிரிவில் கலசலிங்கம் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் தீபன், சரவணன் முதலிடம் பெற்றனர். சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியை சேர்ந்த மைக்கேல் ஜான்சன், பாளையங்கோட்டை பிரான்சிஸ் சேவியர் கல்லூரியை சேர்ந்த விஷாலி, ஸ்ரீவித்யா இன்ஜினியரிங் கல்லூரியை சேர்ந்த விஜய்கிஷன் மற்றும் லட்சுமி இரண்டாம் இடம் பெற்றனர். முன்னதாக பாடகி வைஷ்ணவி இறைவணக்கம் பாடினார். எவரெஸ்ட் ஆர்கெஸ்ட்ரா இசையில் மாணவ, மாணவியர்கள் சினிமா பாடல்கள் பாடினர். பரிசளிப்பு விழாவிற்கு தலைவர் நைனா முகமது தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற துணை கலெக்டர் ஜெகநாதன் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்