தேசிய இளைஞர் தின தடகள போட்டிகளில் 40 பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்பு
திருப்பூர்: திருப்பூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற, தேசிய இளைஞர் தின தடகள போட்டிகளில், 40 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். போட்டி முடிவு மாணவர் பிரிவு 100 மீ., ஓட்டத்தில், முகுந்தன் (செயின்ட் ஜோசப்) முதலிடம், அஸ்வத் (ஜெயந்தி மெட்ரிக்) 2ம் இடம், கிரிஸ்ட் ஓலிவர்லியோ (இன்பேன்ட் ஜீசஸ்) 3ம் இடம். மாணவியர் பிரிவில், ஜாஸ்மின் பேகம் (திருமுருகன்) முதலிடம், நிவேதிதா (பிரண்ட்லைன்) 2ம் இடம், சிவரஞ்சனி (விவேகானந்தா) 3ம் இடம். மாணவர் பிரிவு 200 மீ., ஓட்டத்தில், முகுந்தன் (செயின்ட் ஜோசப்) முதலிடம், உதித்குமார் (விகாஸ் வித்யாலயா) 2ம் இடம், சூர்யா (செஞ்சுரி) மூன்றாமிடம். மாணவியர் பிரிவில், லோகிதா (செஞ்சுரி) முதலிடம், ஜாஸ்மின் பேகம் (திருமுருகன்) 2ம் இடம், நிவேதிதா (பிரண்ட்லைன்) 3ம் இடம். மாணவியர் பிரிவு 400 மீ., ஓட்டத்தில், லோகிதா (செஞ்சுரி) முதலிடம், நிவேதினி (ஜெய்வாபாய்) 2ம் இடம், காயத்ரி (விவேகானந்தா) 3ம் இடம். மாணவர் பிரிவு 800 மீ., ஓட்டத்தில், முத்துக்குமார் (செஞ்சுரி) முதலிடம், பாலயோகி (செயின்ட் ஜோசப்) 2ம் இடம், உதித்குமார் (விகாஸ் வித்யாலயா) 3ம் இடம். மாணவர் பிரிவு நீளம் தாண்டுதலில், அரவிந்த் (விவேகானந்தா) முதலிடம், முகுந்தன் (செயின்ட் ஜோசப்) 2ம் இடம், அஸ்வத் (ஜெயந்தி) 3ம் இடம். மாணவியர் பிரிவில், ஜாஸ்மின் பேகம் (திருமுருகன்) முதலிடம், லோகிதா (செஞ்சுரி) 2ம் இடம், நிவேதிதா (பிரண்ட்லைன்) 3ம் இடம். மாணவர் பிரிவு உயரம் தாண்டுதலில், சஞ்சய்குமார் (விகாஸ் வித்யாலயா) முதலிடம், சிவசக்தி (திருமுருகன்) 2ம் இடம், சபரீஸன் (பிரண்ட்லைன்) 3ம் இடம். மாணவியர் பிரிவில், நிவேதிதா (பிரண்ட்லைன்) முதலிடம், வினிதா (சாரதா வித்யாலயா) 2ம் இடம், காயத்ரி (செஞ்சுரி) 3ம் இடம். மாணவர் பிரிவு குண்டு எறிதலில், ஆதித்யா (வீரசிவாஜி) முதலிடம், அபி சாமுவேல் (செஞ்சுரி) 2ம் இடம், பாலவெங்கடேஷ் (விவேகானந்தா) 3ம் இடம். மாணவியர் பிரிவில், மதுமிதா (கொங்கு) முதலிடம், சவுந்தர்யா (செஞ்சுரி) 2ம் இடம், சண்முகப்பிரியா (சுவாமி விவேகானந்தா, கொடுவாய்) 3ம் இடம். மாணவர் பிரிவு 4 து 100 மீ., தொடர் ஓட்டத்தில், விவேகானந்தா வித்யாலயா முதலிடம், விகாஸ் வித்யாலயா 2ம் இடம், செஞ்சுரி பவுண்டேஷன் 3ம் இடம். மாணவியர் பிரிவில், செஞ்சுரி பவுண்டேஷன் பள்ளி முதலிடம், விவேகானந்தா வித்யாலயா 2ம் இடம், திருமுருகன் பள்ளி 3ம் இடம் வென்றது. சீனியர் மாணவர் பிரிவில், 13 புள்ளிகள் பெற்ற செயின்ட் ஜோசப் மாணவன் முகுந்தன், தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார்; 13 புள்ளிகள் பெற்று, செயின்ட் ஜோசப் பள்ளி சாம்பியன் பட்டம் பெற்றது. மாணவியர் பிரிவில், செஞ்சுரி பவுண்ஷேன் மாணவி லோகிதா, திருமுருகன் மெட்ரிக் மாணவி ஜாஸ்மின் பேகம் ஆகியோர் தலா 13 புள்ளிகள் பெற்று, தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றனர். 22 புள்ளிகள் பெற்ற செஞ்சுரி பவுண்டேஷன் பள்ளி, சாம்பியன் பட்டம் வென்றது.