உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை; மே 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியாக உள்ள நிலையில், மேற்படிப்புகளில் சேர்க்கை பெற பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில், பி.இ., பி.டெக்., மற்றும் பி.ஆர்க்., படிப்புகளுக்கான டி.என்.இ.ஏ., எனப்படும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு, மே 7ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.'ஆன்லைன் விண்ணப்பித்திற்கான https://www.tneaonline.org/ எனும் இணையதளம் மே 7ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும்' என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்