உள்ளூர் செய்திகள்

ஓ.எஸ்.எல்.சி., : பள்ளப்பட்டி மாணவிகள் சாதனை

பத்தாம் வகுப்பு ஓ.எஸ்.எல்.சி., தேர்வில் பள்ளப்பட்டி யு.எச்., ஓரியன்டல் அரேபிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ருமானியா ஆப்ரின் 500க்கு 480 மார்க்குகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அதேப் பள்ளியைச் சேர்‌ந்த மாணவி ஜோயா சபூரா பாத்திமா 474 மார்க்குகள் பெற்று 2ம் இடம் பிடித்துள்ளார். இதே பள்ளியைச் சேர்ந்த ரபியாத்துல் பசாரியா 473 மார்க்குகள் பெற்று 3ம் இடத்தை பிடித்துள்ளார். மாநிலத்தில் முதல் 3 இடங்களையும் ஒரே பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இவர்கள் 3 பேரும் அரேபிக் மொழியை முதல் பாடமாக எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்