உள்ளூர் செய்திகள்

அமிர்தா பல்கலை பொறியியல் கல்லூரி கவுன்சிலிங்

கோவை, எட்டிமடையில் அமைந்துள்ள அமிர்த விஷ்வ வித்யாபீடம் பல்கலை, கொல்லம், அமிர்தபுரி, பெங்களூரு ஆகிய மூன்று இடங்களில் அமைந்துள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான பி.டெக்., நுழைவுத் தேர்வை, ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் தனித்தனியாக நடத்துகிறது. கடந்த ஏப். 17ல் அனைத்து மாநிலங்களிலும் நுழைவுத் தேர்வு நடந்தது. இத்தேர்வு முடிவுகள், மே 5ல் பல்கலை வெப்சைட்டில் வெளியிடப்பட்டன. நுழைவுத் தேர்வின் தரவரிசைப் பட்டியலின்படி, முதல் 9,000 இடம் பிடித்தவர்களுக்கு கவுன்சிலிங் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் பல்கலையின் மூன்று மையங்களில் (கோவை, கொல்லம், பெங்களூரு), செயற்கைக்கோள் மூலம் ஒரே நேரத்தில் கவுன்சிலிங் நடைபெறவுள்ளது. 2,100 மாணவ, மாணவியர் இப்பல்கலையில் சேர்க்கப்படுவர். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இத்தகவலை, மாணவர் சேர்க்கை தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்