உள்ளூர் செய்திகள்

நாட்டில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை குறைவு

வேலூர் : நம்நாட்டில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது, உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், அப்போது தான், நாம் வளர்ந்த நாடாக மாறமுடியும் என, வி.ஐ.டி., பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார். பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும், உயர்கல்வி அளிக்கும் திட்டத்தை, வரும் 15ம் தேதி முதல் செயல்படுத்த, வி.ஐ.டி., பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்த கலந்துரையாடல் கூட்டம், வி.ஐ.டி., பல்கலையில் நடந்தது. கூட்டத்தில் பேசிய வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன், "நம் நாட்டில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் போதுதான், நாம் வளர்ந்த நாடாக மாறமுடியும்." "வேலூர் மாவட்டத்தை கல்வியில் முன்னேற்றும் பொருட்டு, அனைவருக்கும் உயர்கல்வி திட்டத்தை வி.ஐ.டி., செயல்படுத்தவுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இத்திட்டத்தை செய்து முடிக்க உள்ளது" என்றார். கூட்டத்தில், பல்வேறு கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்