குடும்ப நல ஆலோசனையில் முதுநிலைப் பட்டம்
குடும்பச் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் ஆலோசனைகளை வழங்குபவராக பணியாற்ற விரும்புபவர்களுக்கு M.Sc., Counseling and Family Therapy (M.Sc., C.F.T) இரண்டாண்டு முதுநிலை அறிவியல் பட்டத்தை இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழம் வழங்குகிறது. மனித வள மேம்பாட்டுத்துறை மற்றும் குடும்பநலம், குழந்தைகள் நல மேம்பாடு உள்ளிட்ட துறைகள் சார்ந்து இளநிலைப் படிப்பு படித்திருக்க வேண்டும். கல்விக் கட்டணமாக 25 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.ignou.ac.in என்ற இணையப் பக்கத்தைப் பார்வையிடலாம்.