எல்.எல்.பி. படிப்பிற்கு உடனடி துணைத் தேர்வு
எல்.எல்.பி. பட்டப்படிப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு உடனடியாக துணைத் தேர்வு நடத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில் டெல்லி பல்கலைக்கழகத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி பல்கலைக்கழக எல்.எல்.பி. மாணவர் ஆதித்ய பிரசாத் அந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். 3ம் ஆண்டு படிப்பில் தன்னை அனுமதிக்கவில்லை என்று கூறிய அவர், துணைத் தேர்வை நடத்தமாறு பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிடக் கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார். வழக்கின் விசாரணையில் பல்கலை சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், 4 செமஸ்டர்களில் உள்ள 20 பாடங்களில் குறைந்தபச்ம் 15 பாடங்களில் தேர்ச்சி பெற்றால்தான் 3ம் ஆண்டு படிப்பதற்கு அனுமதி வழங்கப்படும். மனுதாரர் 15 பாடங்களில் தேர்ச்சி பெறாததால் அவரை 3ம் ஆண்டு படிப்பிற்கு அனுமதிக்கவில்லை என்று வாதிட்டது. விசாரணைக்குப் பிறகு இவ்வழக்கு வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.