உள்ளூர் செய்திகள்

சாதனையாளர் விருது பெற மாணவர்களுக்கு அழைப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கலைத்துறையில் சாதித்த மாணவர்களுக்கு சாதனையாளர் விருது பெற ஜெயம் சமூக இளையோர் கலைத்தொடர்பு மையம் அழைப்பு விடுத்துள்ளது. மாவட்டத்தில் பேச்சு, விளையாட்டு, சமூகசேவை, அறிவியல் கண்டுபிடிப்பு, கராத்தே, பரதம், இசை, பாடல், ஓவியம், கவிதை, கட்டுரை, பொது அறிவு, பலகுரல் உள்ளிட்ட பல்வேறு கலைத்துறையில் சாதனை படைத்த மாணவர்களின் தனி திறனை ஊக்கப்படுத்த, சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. சிறப்பு கலையில் தேர்ச்சி பெற்றவர்கள், அந்த சான்றிதழின் மூன்று நகல்கள், அதனுடன் ரூ.10க்கான ஸ்டாம்ப் ஒட்டி தங்கள் வீட்டு முகவரி எழுதப்பட்ட, இரண்டு தபால் கவரினை இணைத்து ஜெயம் சமூக இளையோர் கலை தொடர்பு மையம் 39-சி மல்லிகைபுரம் முதன்மை சாலை, பாலக்கரை, திருச்சி- 620001 என்ற முகவரிக்கு அக்., 21 ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தினை கல்லுரி துறை தலைவர்கள் 3 பேர் கொண்ட குழு பரீசிலித்து, தகுதியுடைய மாணவர்களை விருதுக்காக தேர்வு செய்வர். விருதுநகரில் நடைபெறும் விழாவில் இவர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கப்படும். 10, பிளஸ் 2 பொது தேர்வில் 80 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்களும் விருதுக்காக விண்ணப்பிக்கலாம். 5 வயது முதல் 30 வயது மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், என மைய நிறுவனர் ஜே. ஜெகரெட்சகன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்