நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள கூடலூர், பந்தலூர், உட்ப பட நான்கு தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 2) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.