உள்ளூர் செய்திகள்

தங்கப் பதக்கம் வென்ற திருப்பூர் மாணவன்

திருப்பூர்: சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில், கடந்த மாதம் டேக்குவாண்டா மற்றும் பூம்சே (கராத்தே) போட்டி நடந்தது. திருப்பூர், செங்கப்பள்ளி ஸ்ரீகுமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, ஆறாம் வகுப்பு மாணவன் ரிகாலின் போட்டிகளில் பங்கேற்றார். டேக்குவாண்டா, பூம்சே (கராத்தே) ஆகிய இரண்டு போட்டிகளிலும் அசத்தலாக செயல்பட்டு, தங்கப்பதக்கம் வென்றுள்ளார். பள்ளி நிர்வாக இயக்குனர் செந்தில்குமரன், தலைமை ஆசிரியர் பங்கஜம் உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்