உள்ளூர் செய்திகள்

தடகளம்: ஐ.டி.ஐ. மாணவர் மாநில சாதனை

நாமக்கல்: மாநில அளவிலான குண்டு எறியும் போட்டியில் தனியார் ஐ.டி.ஐ. கல்லூரி மாணவர் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். தனியார் ஐ.டி.ஐ. கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவில் விளையாட்டு போட்டி திண்டுக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடந்தது. அதில், நாமக்கல் பி.ஜி.பி. ஐ.டி.ஐ. கல்லூரி மாணவர் மணிகண்டன், குண்டு எறியும் போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவரை பி.ஜி.பி., கல்வி நிறுவன தலைவர் பழனி பெரியசாமி, தாளாளர் பெருமாள், ஐ.டி.ஐ. முதல்வர் நேதாஜி, ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்