உள்ளூர் செய்திகள்

தினமலர் செய்தியால் திறக்கப்பட்ட பள்ளிக் கட்டடங்கள்!

ஆவடி: பணிகள் முடிந்தும், மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படாத பள்ளி வகுப்பறை மற்றும் ஆய்வக கட்டடங்கள், தினமலர் செய்தியால் திறக்கப்பட்டன. ஆவடி, மிட்ணமல்லி அரசு மேல்நிலைப் பள்ளியில், பழைய வகுப்பறை கட்டடங்கள் சேதமடைந்து உறுதியிழந்து உள்ளன. மாணவ, மாணவியரின் பாதுகாப்பு கருதி, அதன் வளாகத்தில், 1.22 கோடி ரூபாய் செலவில், 12 வகுப்பறைகள், 1 ஆய்வகம், 2 கழிப்பறைகள், குடிநீர் வசதி ஆகியவை அமைக்கப்பட்டன. அவை, பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. இதுகுறித்து, கடந்த 9ம் தேதி, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதை அடுத்து, ஆய்வகம், வகுப்பறைகளுக்கான புதிய கட்டடங்கள் மட்டும், நேற்று திறக்கப்பட்டன. அதேபோல், அரைகுறையாக விடப்பட்ட, பள்ளிக்கான சுற்றுச்சுவரை முழுமையாக அமைத்தால், மாணவ, மாணவியருக்கு பாதுகாப்பாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்