அங்கன்வாடி மையங்களுக்கான தேவைகள் எப்போது நிறைவேறும்?
திருமங்கலம்: திருமங்கலம் பகுதியில் 119 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில் 70 மையங்களில் சத்துணவு அமைப்பாளர்கள் உள்ளனர். 18 சத்துணவு அமைப்பாளர்கள் இரு மையங்களை கவனித்து வருகின்றனர். தற்போது ஊழியர் பற்றாக்குறையால் சத்துணவு அமைப்பாளர்கள் பணிச் சுமைக்கு ஆளாகியுள்ளனர். பல்வேறு மையங்களில் உதவியாளர்கள் இல்லாததால், சத்துணவு பணியாளர்களே, மதிய உணவு சமைக்கும் வேலையையும் செய்யும் சூழல் உள்ளது. பல மையங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராணியிடம் கேட்டபோது கருத்து கூற மறுத்துவிட்டார்.