உள்ளூர் செய்திகள்

சென்னை பல்கலை மாணவர் போராட்டம் அமைதிக்குழு

சென்னை பல்கலையில், மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர, பேராசிரியருடன் அமைதிக்குழு நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்க, பல்கலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை பல்கலை கழகத்தில், அரசியல் அறிவியல் துறை தலைவர் (பொறுப்பு) பதவி, ராமு மணிவண்ணனிடம் இருந்து பறிக்கப்பட்டு, மூத்த பேராசிரியர் கோடீஸ்வர பிரசாத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு பேராசிரியர் மணிவண்ணன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அவருக்கு ஆதரவாக துறை மாணவர்கள், 10 நாட்களாக, பல்கலை வளாகத் தில் போராட்டம் நடத்துகின்றனர்.இந்நிலையில், பிரச்னைக்கு தீர்வு காண, துணைவேந்தர் தாண்டவன் தலைமை யில் அவசர கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், பேராசிரி யர் மணிவண்ணன் மீது நடவடிக்கை எடுக்க, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். பின், அமைதியை ஏற்படுத்த முடிவானது. இதன்படி, வளாக இயக்குனர் டேவிட் அம்ப்ரோஸ் தலைமை யில், குற்றவியல் பேராசிரியர் சீனிவாசன், வணிக வியல் பேராசிரியர் ஜோதி சிவராமன் உள்பட ஒன்பது பேர் அடங்கிய அமைதி கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டியினர், மணிவண்ணன் மற்றும் மாணவர்களிடம் பேச்சு நடத்தினர். ஆனால், போராட்டத்தை விலக்க, மாணவர்களும், மணிவண்ணனும் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, சட்ட நிபுணர்களுடன், திங்கள் கிழமை ஆலோசனை நடத்த, பல்கலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்