உள்ளூர் செய்திகள்

தேசிய திறனாய்வு தேர்வு; விண்ணப்பிக்க அழைப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்கள், தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம், என கல்வி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 2015-16ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், நவ., மாதம் 8ம் தேதி நடைபெற உள்ள தேசிய திறனாய்வுத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் கடந்த 20ம் தேதி முதல் 31ம் தேதி வரை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 50 ரூபாய் தேர்வு கட்டணத்தொகையுடன் சேர்த்து, சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வரும் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ளலாம், என கல்வி மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்