உள்ளூர் செய்திகள்

பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கு இறுதி கலந்தாய்வு

தமிழகத்தில், பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கு, சுய நிதி கல்லுரிகளில், 1,364 இடங்கள் உள்ளன. இதற்கான, இறுதி கட்ட கலந்தாய்வு, சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், இன்று பிற்பகல், 2:00 மணிக்கு துவங்குகிறது. இதற்கு, 3,700 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். 15ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கும். டிப்ளமோ நர்சிங்:  டிப்ளமோ நர்சிங் படிப்புக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, இதே இடத்தில், இன்று காலை, 9:00 மணிக்கு துவங்கி, 1:00 மணிக்கு முடியும். 298 இடங்களுக்கு, 650 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.  மேலும் விவரங்களுக்கு, www.tn.health.org என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்