அண்ணா பதக்கம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை: வீர, தீர செயலுக்கான, அண்ணா பதக்கம் பெற விரும்புவோரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழகத்தில், வீர, தீர செயல் புரிந்தோருக்கான அண்ணா பதக்கம், ஆண்டுதோறும், குடியரசு தின விழாவின் போது, முதல்வரால் வழங்கப்படுகிறது. இதை பெறுபவருக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பதக்கம் வழங்கப்படும். பொதுமக்களில், மூன்று பேர்; அரசு ஊழியர்களில், மூன்று பேருக்கு பதக்கம் வழங்கப்படும்; இதற்கு வயது வரம்பு இல்லை. அடுத்த ஆண்டு வழங்கப்பட உள்ள பதக்கத்திற்கு, தகுதியானவர்களை தேர்வு செய்வதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வீர, தீர செயல்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன், மாவட்ட கலெக்டர் மூலமாக, அரசு முதன்மை செயலர், பொதுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-600009 என்ற முகவரிக்கு, டிச., 15க்குள், விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். பதக்கம் பெற தகுதியுள்ளவர், அரசால் நியமிக்கப்பட்ட, தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படுவார் என, அரசு பொதுத் துறை செயலர் யதீந்திரநாத் ஸ்வேன் தெரிவித்துள்ளார்.