உள்ளூர் செய்திகள்

கலாம் பிறந்த நாள்; அறிவியல் கண்காட்சி

மதுரை: மதுரை சேதுபதி பள்ளியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடந்தது. கண்காட்சியை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி துவக்கி பேசியதாவது: மின் உற்பத்திக்கு காற்றாலை, சூரிய ஆற்றலை அதிகம் பயன்படுத்திட வேண்டும். மாணவர்கள் தங்கள் அறிவியல் அறிவை கொண்டு சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்துக் கொள்ளும் வழிமுறைகளையும் கண்டுபிடிக்க வேண்டும், என்றார். தலைமை ஆசிரியர் பாலகுருநாதன், ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி, ஆசிரியர் முரளிதரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்