பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி
தர்மபுரி: அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி கல்வித்துறை சார்பாக, தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரை போட்டி நடந்தது. இதில், 6 வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியில், 30 பேரும், கட்டுரைப் போட்டியில், 25 பேரும் பங்கேற்றனர். 9ம் வகுப்பு முதல், பிளஸ், 2 வரையிலான மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியில், 37 பேரும், கட்டுரைப் போட்டியில், 42 பேரும் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள், வரும், 15ம் தேதி, சென்னையில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்கின்றனர்.