நுழைவுத் தேர்வு விவகாரம்; வெங்கையா கைவிரிப்பு
சென்னை: மருத்துவக் கல்லுாரி நுழைவுத் தேர்வு விவகாரத்தில்,உச்ச நீதிமன்ற தீர்ப்பில், மத்திய அரசு தலையிட்டு எதுவும் செய்ய முடியாது, என, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதில், மத்திய அரசிற்கு எந்த சம்பந்தமும் இல்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பில், மத்திய அரசு தலையிட்டு எதுவும் செய்ய முடியாது.விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர் வங்கிகளுக்கு பாக்கி வைத்துள்ளதை, ஒரு காசு விடாமல், திரும்ப வசூலிக்கப்படும்.