பி.சி.ஏ., எம்.சி.ஏ., படிக்க இக்னோவின் சலுகை
இக்னோவில் பி.சி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிக்க விரும்புவோருக்கு சில சலுகைகளை இந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. முன்னர் இப்படிப்பைப் படிக்க விரும்புவோருக்கு சர்டிபிகேட் இன் கம்ப்யூட்டிங் (சி.ஐ.சி.,) என்னும் சான்றிதழ் படிப்பை கட்டாயம் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. தற்போது இக்னோ இதை தளர்த்தியுள்ளது. இன்டர்மீடியட்டுக்கு இணையான படிப்பை கணிதத்துடன் முடிக்காதவர்களும், வொகேஷனல் பிரிவில் கம்ப்யூட்டர் டெக்னிக் படிக்காதவர்களும் கூட இனி இக்னோவின் பி.சி.ஏ., படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். எம்.சி.ஏ., படித்திட ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் முடித்திருந்தால் போதும். எனினும் இன்டர் மீடியட்டுக்கு இணையான படிப்பில் கணிதத்தைப் படிக்காதவர்கள் எம்.எஸ்.60 என்ற இக்னோவின் தாளை எம்.சி.ஏ., படிக்கும் போது எழுத வேண்டும்.