உள்ளூர் செய்திகள்

கோவை மாவட்ட சி.இ.ஓ., சென்னைக்கு இடமாறுதல்

கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(சி.இ.ஓ) ஆக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சேதுராம வர்மா பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது சென்னை மாநகராட்சி முதன்மை கல்வி அலுவலர் ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி முதன்மை கல்வி அலுவலர், காஞ்சிபுரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி, கோவையின் புதிய முதன்மை கல்வி அலுவலர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஓரிரு மாதங்கள் வரை திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலராக இருந்து, விருதுநகர் சி.இ.ஓ., ஆக பதவி உயர்வு பெற்றுச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.தனது நேர்மையான, எளிமையான அணுகுமுறை மூலம் அனைவர் மனதிலும் சிறப்பான இடம் பிடித்திருந்த சேதுராம வர்மாவின் இடமாறுதல் உத்தரவு, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்