உள்ளூர் செய்திகள்

கல்லுாரியில் சேர குவிந்த மாணவ, மாணவியர்

கடலுார்; கடலுார் அரசு கல்லுாரியில் சேர நேற்று மாணவ, மாணவியர் குவிந்தனர்.கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லுாரியில், 2020-2021ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. சேர்க்கைக்கு தேர்வான மாணவர்கள், காத்திருப்பு பட்டியலில் இடம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு எஸ்.எம்.எஸ்., மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பி, சேர்க்கை நடந்து வருகிறது.கல்லுாரியில் சேர விண்ணப்பித்து தகவல் கிடைக்காதவர்கள் உரிய சான்றுகளுடன் வந்து தரவரிசை அடிப்படையில் சேர்ந்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது.அதையடுத்து, நேற்று காலை தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரியில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் குவிந்தனர். அவர்களுக்கு தெர்மோ ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து, கிருமி நாசினி கொடுத்து கை சுத்தம் செய்ய வைத்து, துறை வாரியாக சேர்க்கைக்கு பிரித்து அனுப்பி, வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்