மருத்துவர், செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
சென்னை: &'கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள தகுதியுள்ள மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்&' என சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் 115 மருத்துவ அலுவலர்கள் பணியிடங்களுக்கும் 189 செவிலியர் பணியிடங்களுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தகுதியுள்ள மருத்துவ அலுவலர்கள் http://covid19.chennaicorporation.gov.in/covid/medicalofficer/ என்ற இணையதளத்திலும் செவிலியர்கள் http://covid19.chennaicorporation.gov.in/covid/nurse/ என்ற இணையதளத்திலும் உரியசான்றுகளுடன் இன்று இரவுக்குள் பதிவு செய்யலாம். மருத்துவ அலுவலருக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ். படிப்பும் அதேபோல் செவிலியர்கள் டிப்ளமோ நர்சிங்கும் படித்திருக்க வேண்டும்.விரும்பமுள்ளவர்கள் நாளை காலை 10:00 மணிக்கு சென்னை மாநகராட்சி அம்மா மாளிகையில் நடக்கும் நேர்காணலில் பங்கேற்கலாம். பதிவு செய்ய தவறியவர்களும் உரிய சான்றுடன் நேரில் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு மருத்துவர்கள் 94983 46492; செவிலியர்கள் 94983 46493 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.