உள்ளூர் செய்திகள்

அதிக கல்வி கட்டணம் அதிகாரிகள் எச்சரிக்கை

சென்னை: தமிழகம் முழுதும் தனியார் பள்ளிகளில், ஆன்லைன் வகுப்புகள் துவங்கி உள்ளன. மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்கும் பணிகளும் துவங்கி உள்ளன.இந்நிலையில், தனியார் பள்ளிகளுக்கு, அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதில், &'அனைத்து தனியார் பள்ளிகளும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, கல்வி கட்டண கமிட்டி நிர்ணயித்ததில், 75 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். அதை மீறினால், சட்ட நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்&' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்