உள்ளூர் செய்திகள்

ஏ.எல்.எம்., கல்வி முறை செயல்பாடு போதாது

கோவை: "ஏ.எல்.எம். கல்வி முறையில் "இ&' கிரேடு தேர்ச்சிதான் உள்ளது. மூன்றில் ஒரு பகுதி மாணவர்கள் "இ&' கிரேடுதான் பெற்றுள்ளனர். இந்த நிலைமை மாற வேண்டும்,&'&' என்று அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில இயக்குனர் வெங்கடேசன் கூறினார். அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்(எஸ்.எஸ்.ஏ) மாநில இயக்குனர் வெங்கடேசன் நேற்று கோவை மாவட்டத்தில் உள்ள ஆறு அரசுப் பள்ளிகளில் ஏ.பி.எல்., ஏ.எல்.ஏம். கல்வி முறைகளை பார்வையிட்டார். மாலையில் அரசு மகளிர் பி.எட்., கல்லூரியில் ஆசிரியர் பயிற்றுனர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றார். இதில் வெங்கடேசன் பேசியதாவது:அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் ஏ.பி.எல்., ஏ.எல்.எம்., திட்டங்களுக்காக கடந்த ஆண்டு 902 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் 95 சதவீதம் செலவிடப்பட்டது. இந்த ஆண்டுக்கான ஒதுக்கீடு 862 கோடி ரூபாய். இதில் 65 சதவீதத்தை மத்திய அரசும், 35 சதவீதத்தை மாநில அரசும் ஏற்றுள்ளது. இதை பயனுள்ள விதத்தில் நுணுக்கமாக செலவிட வேண்டும். அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், மாநிலத்தில் இதுவரை புதிதாக 10 ஆயிரம் வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. பள்ளியை மாணவர்கள் அடைவதற்கான வழிமுறைகளை 100 சதவீதம் அடைந்துள்ளோம். மாணவர் சேர்க்கையிலும் 100 சதவீதம் அடைந்து விட்டோம். நான்காம் வகுப்பு வரை ஏ.பி.எல். முடிந்தவுடன் ஐந்தாம் வகுப்பில் தொடர்ந்து மாணவர்களை தயார்படுத்துவது ஆசிரியரின் முக்கிய பணி. தமிழ், ஆங்கிலம், அடிப்படை கணிதத்தில் போதுமான திறன் பெற்றிருக்கின்றனரா என கவனிக்க வேண்டும். தமிழகத்தில் கோவை உட்பட 10 மாவட்டங்கள் ஏ.பி.எல். கல்வித் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன. ஆனால் ஏ.எல்.எம். கல்வி முறையில் "இ&' கிரேடு தேர்ச்சிதான் உள்ளது. மூன்றில் ஒரு பகுதி மாணவர்கள் "இ&' கிரேடு பெற்றுள்ளனர். இந்த நிலைமை மாற வேண்டும்.ஒட்டு மொத்தமாக இன்னும் மேம்பட வேண்டும். மாதம் இருமுறை பள்ளியை ஆய்வு செய்து ஒவ்வொரு பள்ளியிலும் அரை நாள் செலவிட்டு ஆய்வு செய்ய வேண்டும். டிசம்பர் முதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருடன் மாதம் ஒருமுறை கலந்தாலோசனை நடத்த வேண்டும்.இவ்வாறு, வெங்டேசன் பேசினார். மாநில தொடக்கக் கல்வி இயக்குனர் தேவராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி,  மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சந்திரசேகரன், எஸ்.எஸ்.ஏ., மாவட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் காளியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்