உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறன் மாணவர் கண்டறிய சிறப்பு பயிற்சி

கோவை: மாற்றுத்திறன் கொண்ட மாணவரா என்பதை வகுப்பு ஆசிரியர்கள் எப்படி கண்டறிவது என்பது குறித்த பயிற்சி அனைத்து வட்டார வள மையங்களிலும் இன்று நடக்கிறது.மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஆரோக்கியம், சுகாதாரம் மற்றும் வகுப்பறை செயல்பாடுகளை விளக்க, கோவை மாவட்டத்தில், 15 வட்டாரங்களிலும் செயல்படும் வள மையங்களில் தொடக்க வகுப்பு கையாளும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.சிறப்பு குழந்தைகளுக்கு எப்படி வகுப்பு கையாள்வது; அரசின் நலத்திட்டங்களை பெற்றுதருவது; சிறப்பாசிரியர்களுடன் இணைந்து, கற்றல் திறனை மேம்படுத்துவது குறித்து விளக்கப்படுகிறது. மேலும் 21 வகையான மாற்றுத்திறன் குறைபாடுகள், அதை கண்டறியும் வழிமுறை சொல்லித் தரப்படுகிறது. இயல்பை விட அதீத ஆக்டிவ் மற்றும் மந்தநிலையுடன் இருக்கும் குழந்தைகளை, ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால், விரைவில் ஆரோக்கியமான குழந்தைகளாக மாற்ற முடியும் என்பதால், இப்பயிற்சி வழங்க உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்