சர்வதேச காற்றாடி திருவிழா மாமல்லையில் நடக்கிறது
மாமல்லபுரம்: குளோபல் மீடியா பாக்ஸ் என்ற தனியார் நிறுவனம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் முதல் முறையாக சர்வதேச காற்றாடி திருவிழாவை மூன்று நாட்கள் நடத்தியது. இவ்விழாவில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் காற்றாடி கலைஞர்கள் பங்கேற்றனர்.திருவள்ளுவர் மற்றும் குதிரை, யானை உள்ளிட்ட விலங்குகள், கார்ட்டூன் கதாபாத்திரங்கள் என, பல்வேறு வடிவங்களில் காற்றாடிகள் பறக்க விடப்பட்டன. தற்போது, இரண்டாம் முறையாக, ஆகஸ்ட் 12 - 15ல் மாமல்லபுரத்தில் காற்றாடி திருவிழா நடத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து, அந்நிறுவனம் தங்கள் இணையதளத்தில் அறிவித்துள்ளது. www.tnikf.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.