ஐ.டி.ஐ., நிறுவனங்களில் அரசு ஒதுக்கீடு வெளியீடு
சென்னை: ஐ.டி.ஐ., நிறுவனங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான சேர்க்கை விபரங்கள், இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது.தமிழகத்தில் 102 அரசு ஐ.டி.ஐ., மற்றும் 330 தனியார் ஐ.டி.ஐ., நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் நடப்பு கல்வியாண்டுக்கான பயிற்சியாளர் சேர்க்கை நடந்து வருகிறது. இவற்றில், அரசு ஒதுக்கீட்டு இருக்கைகளின் சேர்க்கைக்கான ஒதுக்கீடு விபரங்கள், வரும், 10ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முன் கூட்டியே www.skilltraining.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள், தங்கள் தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையை, இணையதளத்தில் சென்று லாகின் செய்து அறிந்து கொள்ளலாம்.அதன்பிறகு சம்பந்தப்பட்ட ஐ.டி.ஐ., நிறுவனத்தில், அசல் சான்றிதழுடன் சென்று, உரிய கட்டணம் செலுத்தி, வரும், 12ம் தேதிக்குள் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.