உள்ளூர் செய்திகள்

தொலைதூர கல்வி: மாணவர் சேர்க்கை துவக்கம்

பல்கலை மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள், சான்றிதழ் படிப்புகள், எம்.பி.ஏ.,  பி.எட்., ஆகியவற்றுக்கான, மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள், நேற்று முதல் வினியோகிக்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள், சென்னை பல்கலை தொலைதுாரக் கல்வி நிறுவனத்தில் உள்ள, ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை மையத்தின் வழியே சேர்ந்து பயன்பெறலாம். இம்மையம் அனைத்து நாட்களிலும் செயல்படுகிறது.மேலும், http://online.ideunom.ac.in இணையதளம் வழியாகவும், சென்னைப் பல்கலை 64 கற்றல் உதவி மையம் ஆகியவற்றின் வழியாக சேரலாம். மேலும் விபரங்களை, www.ideunom.ac.in இணையதளத்திலும் அறியலாம் என பல்கலை பதிவாளர் ஏழுமலை தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்