உள்ளூர் செய்திகள்

யூ.டி.சி., தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு

புதுச்சேரி: யூ.டி.சி.,எழுத்து தேர்வு வரும் 23ம் தேதி 133 தேர்வு மையங்களில் நடக்கின்றது. இதற்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறை சார்பு செயலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில் யூ.டி.சி.,பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வு புதுச்சேரி -107; காரைக்கால்-13; ஏனாம்-8; மாகி-5 என மொத்தம் 133 மையங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். இது தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தேர்வர்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 0413-2233338 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்