நாளை ராமநாதபுரம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
ராமநாதபுரம்: நாளை ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அமாவாசை தினத்தை முன்னிட்டு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு ஏராளமான மக்கள், முன்னோர்களுக்கு அக்னி தீர்த்த கடற்கரையில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அன்றைய நாளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், மாணவர்களின் நலனை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.அதற்கு பதில் ஜூலை 22 வேலை நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.