உள்ளூர் செய்திகள்

அரசு உதவித்தொகை கிடைக்காமல் மாணவி பரிதவிப்பு

இதனால், மாணவியின் குடும்பத்தினர் விரக்தியில் உள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த அரசு மருத்துவமனை சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் மகள் பிரதீபா (18). நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப் பள்ளியில், பிரதீபா பிளஸ் 2 படித்தார். கடந்த மே 14 ம் தேதி ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. அதில், பிரதீபா 1,176 மதிப்பெண் பெற்றார். மதிப்பெண் குறைவாக வந்ததால், பிரதீபா தனது விடைத்தாள் நகலை வாங்கி சரிபார்த்தார். அதில், விடைத்தாள் திருத்தியவரின் கவனக்குறைவால், தமிழ் விடைத்தாளில் ஐந்து மதிப்பெண் சேர்க்காமல் விடுபட்டிருந்தது தெரிந்தது. அந்த மதிப்பெண் சேர்க்கப்பட்டதால், 1,181 மதிப்பெண் பெற்று, பிரதீபா மாநில அளவில் மூன்றாம் இடமும், நாமக்கல் மாவட்டத்தில் முதலிடமும் பிடித்தார். தற்போது, சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் பிரதீபாவிற்கு, அரசு உதவி தொகை கிடைக்கவில்லை. பிரதீபாவின் தந்தை தியாகராஜன் கூறியதாவது: மாநில அளவில் ஏற்கனவே முதல் மூன்று இடம் பிடித்தவர்கள் மட்டுமே ரேங்க் பட்டியலில் இடம் பிடிப்பர். மறுமதிப்பீட்டிற்கு பின் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ரேங்க் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள். ஆனால், முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு வழங்கும் அரசு சலுகைகள், மறுமதிப்பீட்டிற்கு பின் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் கிடைக்கும் என, கல்வி அமைச்சர் கூறினார். மாநில அளவில் முதல் மூன்று இடம், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களின் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கின்றனர். அந்த மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்று கொண்டுள்ளது. அதற்கான உத்தரவையும் சம்பந்தபட்ட மாணவர்களுக்கு அரசு வழங்கி விட்டது. ஆனால்,எனது மகள் பிரதீபாவின் கல்விச் செலவை ஏற்று கொள்வதற்காக உத்தரவை, அரசு இன்னமும் வழங்கவில்லை. விடைத்தாள் திருத்தியவர்களின் கவனக் குறைவால், என் மகளுக்கு அரசு உதவித் தொகை இதுவரை கிடைக்கவில்லை. அரசிடம் இருந்து, இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இது, எங்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்