உள்ளூர் செய்திகள்

உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் டில்லியில் அமைகிறது

புதுடில்லி: உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் டில்லியில் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.புதுடில்லியின் பிரகதி மைதானத்தில் உள்ள சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையம் , 2,700 கோடி ரூபாய் செலவில் பல நவீன வசதிகளுடன் மறுசீரமைப்பு செய்யப்பட்டு உள்ளது. பாரத் மண்டபம் என பெயரிடப்பட்டு உள்ள இந்த புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த விழாவில் அவர் பேசும் போது, உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் டில்லியில் அமைக்கப்படும். புதிய பார்லிமென்ட் கட்டடம், அனைவரையும் பெருமையடைய செய்துள்ளது. போர் நினைவகம், போலீஸ் நினைவகம் மற்றும் அம்பேத்கர் நினைவகம் ஆகியவை கட்டப்பட்டு உள்ளன. கர்த்வ்யா பாதையில், புதிய அலுவலக கட்டடம் அமைய உள்ளது. நமது பணி கலாசாரத்தையும், பணி செய்யும் சுற்றுச்சூழலையும் மாற்ற வேண்டும் எனக்கூறிய மோடி, புதிய அருங்காட்சியகம் குறித்த விபரங்கள் பற்றி கூறவில்லை.சென்ட்ரஸ் விஸ்டாஇதனிடையே, சென்ட்ரல் விஸ்டா மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. மத்திய அமைச்சகங்கள் உள்ளடக்கிய தலைமை செயலகம், பிரதமர், துணை ஜனாதிபதி இல்லங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டுமானங்கள் முடிந்த பிறகு, வடக்கு பிளாக் மற்றும் தெற்கு பிளாக்கில் செயல்படும் அமைச்சகங்கள் புதிய கட்டடத்திற்கு மாற்றப்படும். இதன் பிறகு, வடக்கு மற்றும் தெற்கு பிளாக் ஆகியவை அருங்காட்சியகமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்