வேளாண் பல்கலை விஞ்ஞானிக்கு தேசிய விருது
வேளாண் பல்கலை அறிக்கை: வேளாண் பல்கலை தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய தன்மையர் குமார் தேசிய அளவிலான ஸ்ரீ கிரிதாரி லால் சதா விருதை பெற்றார். பழப்பயிர் ஆராய்ச்சியில் மேற்கொண்ட சீரிய சேவை மற்றும் பங்களிப்பிற்காக இவ்விருது வழங்கப்பட்டது. பல்கலையில் முதன் முதலில் இவ்விருது இவருக்கு தான் கிடைத்துள்ளது.நிதியுதவி செய்யப்பட்ட ஆராய்ச்சித் திட்டங்களுக்கு முதன்மை ஆய்வாளராக குமார் செயல்பட்டுள்ளார். இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு ஒரு கோடி ரூபாய். பத்து ஆண்டுகளில் வாழைப் பயிர் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தினார். நூற்புழுவிற்கு எதிர்ப்பு திறனுள்ள வீரிய ஒட்டு வாழை, பப்பாளியில் அதிக மகசூல், வாழையில் அடர் நடவு மற்றும் நீர் வழி உரமிடுதல், போன்ற புதிய முறைகளை கண்டறிந்தார். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.