உள்ளூர் செய்திகள்

தேசிய நல்லாசிரியர் விருது பெற நேர்காணல்

ஈரோடு: மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் ஆண்டு தோறும் தேசிய நல்லாசிரியர் விருது ஆண்டுதோறும், செப்.,5ல் ஜனாதிபதியால் வழங்கப்படுகிறது. நடப்பாண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க அழைப்பு விடப்பட்டது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் தலா மூன்று ஆசிரியை, ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களிடம் மூன்று பேர் கொண்ட குழு, சான்றிதழ் மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக மேற்கொண்ட நடவடிக்கை போன்றவற்றை நேர்காணல் மூலம் கேட்டறிந்தனர். இதில் மூவரின் அறிக்கை, மாநில அளவிலான தேர்வுக்கு சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும். இறுதியாக மாநில அளவில் சிறந்த மூன்று ஆசிரியை, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு டில்லிக்கு அனுப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்