உயர்கல்வியில் பொது பாடத்திட்டம்: பழனிசாமி கண்டனம்
சென்னை: கல்வியாளர்களை ஆலோசிக்காமல் உயர்கல்வி துறையில் பொது பாட திட்டத்தை புகுத்துகின்றனர் என அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கல்வியாளர்களை ஆலோசிக்காமல் உயர்கல்வித்துறையில் பொது பாடத்திட்டத்தை புகுத்துகின்றனர். இதனால், உயர்கல்வியின் தரம் குறையும் என கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர். பொதுபாடத்திட்டத்தால், பல்கலை மானிய குழு வழங்கும் தன்னாட்சி அந்தஸ்தை உயர்கல்வி நிறுவனங்கள் இழக்க நேரிடும். கல்வித்துறையில் மாறுதல்களை கொண்டு வரும் முன்பு கல்வியாளர்களுடன் தமிழக அரசு ஆலோசிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் பழனிசாமி கூறியுள்ளார்.