உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதி வருகை: யானைகள் முகாம் மூடல்

கூடலூர்: நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில், தாய் யானையை பிரிந்த குட்டி யானைகள் ரகு, பொம்மியும்; அவற்றை பராமரித்து வந்த பழங்குடி தம்பதி பொம்மன் - பெள்ளி இடையேயான பாச உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட த எலிபென்ட் விஸ்பரர்ஸ் ஆவண படத்துக்கு, ஆஸ்கார் விருது கிடைத்தது. இதன் மூலம் யானை குட்டிகள், பாகன் தம்பதி புகழ் பெற்றுள்ளனர்.யானை குட்டிகளை பார்க்கவும்; பாகன் தம்பதியை சந்திக்கவும், ஜனாதிபதி திரவுபதி முர்மு 5ம் தேதி முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வருகிறார். அதற்கான, ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, இன்று முதல் 5ம் தேதி வரை தெப்பக்காடு யானைகள் முகாம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்