உள்ளூர் செய்திகள்

கூடுதல் பணியிடங்கள்: தொழிற்கல்வி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட தொழிற் கல்வி ஆசிரியர் சங்க அவசர கூட்டம் பாளை கதீட்ரல் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மாநில கவுரவ தலைவர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். தொழிற் கல்விகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி கல்வித் தகுதி போதும் என அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஓவியம், தையல், இசை ஆசிரியர் கூடுதல் பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளுக்கு சிறப்பாசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். சமச்சீர் கல்வியில் சிறப்பாசிரியர்களை கொண்டு வர வேண்டும். தென் மாவட்டங்களை சேர்ந்த சிறப்பாசிரியர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வேலையில்லா ஓவியர் ஆசிரியர் சங்கம் ராகவன் என்ற ஆறுமுகநாதன், இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உட்பட நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிறப்பாசியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்