வெளிநாட்டு வேலைக்கு ஸ்பெஷல் பதிவு முகாம்!
தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் வரும் 23ம் தேதி மற்றும் 24ம் தேதிகளில் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இம்முகாம்கள் நடக்கிறது.இந்த சிறப்பு முகாம்களில் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் 3 நகல்கள் மற்றும் 4 போட்டோக்களுடன் வந்து கலந்து கொள்ள வேண்டும். அனுபவம், பாஸ்போர்ட் இல்லாதவர்கள் கல்வி அல்லாத தொழில் அனுபவம் உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம். பதிவு கட்டணமாக லேபர், கொத்தனார், கார்பென்டர், ஸ்டீல் பிட்டர், பிளம்பர், பெயின்டர் முதல் ஐ.டி.ஐ டிப்ளமோ தொழில் அனுபவம் பெற்றவர்கள், ஓட்டல் பணியாளர்கள், பட்ட படிப்பு முடித்தவர்கள் (கலை, அறிவியல், காமர்ஸ்) வரையிலான பணியிடங்களுக்கு 442 ரூபாய், நர்ஸ், பாரா மெடிக்கல் டெக்னீசியன்கள் மற்றும் அனைத்து மருத்துவ பணியாளர்கள், இன்ஜினியரிங் பட்டப் படிப்பு, முதல் நிலை இன்ஜினியரிங், முதுநிலை கணக்காளர், முதுநிலை பட்டதாரிகள், முதுநிலை மேலாண்மை படித்தவர்கள் (எம்.பி.ஏ), கம்ப்யூட்டர் பட்டப் படிப்பு வரை 772 ரூபாய், டாக்டர்கள் 995 ரூபாய் செலுத்தி விண்ணப்ப படிவத்தை பெற்று பதிவு செய்து கொள்ளலாம்.தமிழக அரசின் இந்த சிறப்பு பதிவு முகாம்களை தவறாமல் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதுசம்பந்தமாக மேலும் விபரங்களுக்கு 94446 90026, 9381800181, 99402 76356, 044 - 24464268 என்ற எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் குத்சியா காந்தி தெரிவித்தார்.