அரசு மருத்துவக் கல்லுாரி மைதானம் சீரமைக்கப்படுமா?
கள்ளக்குறிச்சி: அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் பயன்படுத்தும் விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. இக்கல்லுாரியில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு மைதானம் கல்லுாரியின் எதிரே உள்ளது. மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் பலர் காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி மற்றும் மற்றும் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், விளையாட்டு மைதானத்தில் பெரும்பாலன பகுதிகளில் புதர் மண்டியுள்ளது. இதனால், விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தும் மாணவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே, விளையாட்டு மைதானத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு, செயற்கை புற்கள் அமைத்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.