உள்ளூர் செய்திகள்

காமராஜர் நிதியுதவி திட்டம் அமலுக்கு வருமா?

புதுச்சேரி: மகளிர் அரசு பொறியியல் கல்லுாரியில் காமராஜர் கல்வி நிதி உதவித் திட்டம் இன்னும் அமல்படுத்தப் படாததால் மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.புதுச்சேரி அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி, கடந்த 1988-89 ம் ஆண்டு லாஸ்பேட்டையில் ஆரம்பிக்கப்பட்டது. இக்கல்லுாரி கடந்தாண்டு, மகளிர் பொறியியல் கல்லுாரியாக தரம் உயர்த்தப்பட்டது. அதுவரை, பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்புகளாக இருந்த ஆர்க்கிடெச்சுரல் அசிஸ்டண்ட்ஷிப்  இ.இ.இ.,  இ.சி.இ.,  கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய நான்கு படிப்புகள் பி.டெக்., டிகிரி படிப்புகளாக மாற்றப்பட்டுள்ளன.இக்கல்லுாரியில் சென்டாக் மூலம் கவுன்சிலிங் நடத்தி மாணவிகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். சென்டாக் மூலம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், காரைக்கால் காமராஜர் அரசு பொறியியல் கல்லுாரியில் பி.டெக்., சேரும் மாணவர்களுக்கு காமராஜர் கல்வி நிதியுதவி திட்டம் அமல்படுத்தப்படுகின்றது. ஆனால், மகளிர் அரசு பொறியியல் கல்லுாரி மாணவிகளுக்கு காமராஜர் கல்வி உதவித் திட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை.இது குறித்து மகளிர் அரசு பொறியியல் கல்லுாரி மாணவிகள் கூறியதாவது:தொழில்நுட்ப பல்கலைக்கழகம், காரைக்கால் காமராஜர் அரசு பொறியியல் கல்லுாரியில் காமராஜர் கல்வி நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்படுவதால் அங்கு பயிலும் மாணவர்கள் ரூ.13,850 மற்றும் 9,000 ரூபாய் மட்டுமே கல்விக் கட்டணம் செலுத்துகின்றனர். மீதி தொகையை கழித்து கொள்ளப்படுகின்றது.ஆனால், அரசு மகளிர் பொறியியல் கல்லுாரியில் முதலாமாண்டில் 43,500 ரூபாயும், இரண்டாமாண்டில் 40,000 ரூபாய் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. இக்கல்லுாரியில் காமராஜர் கல்வி நிதி உதவி திட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை. இதனால், கல்விக் கட்டணம் கட்டுவதில் நெருக்கடியை சந்தித்து வருகிறோம். குறிப்பாக ஏழை குடும்ப மாணவிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.காமராஜர் கல்வி நிதி உதவி திட்டம் அனைத்து படிப்புகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளார். எனவே, மகளிர் அரசு பொறியியல் கல்லுாரி மாணவிகளுக்கு காமராஜர் கல்வி நிதி உதவி திட்டத்தினை விரைவில் அமல்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மாணவிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்