உள்ளூர் செய்திகள்

கவுன்சிலிங் நடைமுறைகள் பிராந்திய மொழிகளில் வெளியிடப்படுமா?

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தமுள்ள 68 உயர் கல்வி நிறுவனங்களில் மொத்தம் 15 ஆயிரம் சீட்டுகள் உள்ளன. இந்த படிப்புகள்அனைத்திற்கும் ஆன்லைனில் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக சென்டாக்கின் வெப்சைட்டில் (www.centacpuducherry.in) ஒருங்கிணைந்த விண்ணப்பம் ஆண்டுதோறும் பெறப்படுகின்றது.கணினி கலந்தாய்விற்கு பெற்றோர், மாணவர்களிடம் முழு வரவேற்பு கிடைத்துள்ள போதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆன்-லைன் விண்ணப்பம், கவுன்சிலிங் நடை முறைகள் பற்றி தெரியாமல் பரிதவித்து வருகின்றனர். குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் சென்டாக் கவுன்சிலிங் நடைமுறைகள் தெரியாமல்பரிதவிக்கின்றனர்.தகவல் குறிப்பேடுஒவ்வொரு படிப்பிற்கும் கவுன்சிலிங் வழிகாட்டி நெறிமுறைகளைதகவல் குறிப்பேடு சென்டாக் வெளியிட்டு வருகின்றது. ஆனால் அவை ஆங்கிலத்தில் வெளியிட்டு இருந்ததால் கிராமப்புற மாணவர்களிடம் போய் சேரவில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிராந்திய மொழிகளில் வெளியிட்டு இருந்தால் குறைந்தபட்சம் கவுன்சிலிங் நடைமுறைகளை மாணவர்கள் எளிதாக புரிந்து கொண்டு அணுக முடியும். இதனை செய்ய ஆண்டுதோறும் சென்டாக் தவறி வருகிறது. இது கடைசி வரைக்கும் கவுன்சிலிங் நடைமுறையில்எதிரொலித்து வருகின்றது.வெப்சைட்இதேபோல் சென்டாக் கவுன்சிலிங் வெப்சைட்டும் தகவல்களும் பிராந்திய மொழிகளில் இல்லை. முழுமுழுக்க ஆங்கிலத்திலேயே அனைத்து தகவல்களும் இடம் பெறுவதால் கிராமப்புற மாணவர்கள் கண்ணைகட்டி காட்டில் விட்டதைபோன்று பரிதவித்து வருகின்றனர். மாணவர்கள் ஆன் லைனில் பணம் கட்டுவது எப்படி, சீட் கிடைத்த கல்லுாரியில் ஆன்லைன் வழியாக எப்படி தகவல் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் கூடபிராந்திய மொழிகளில் இடம் பெறுவதில்லை.அப்டேட்ஒவ்வொரு சுற்று கவுன்சிலிங் முடிந்த பிறகும் கோர்ஸ் அப்டேட் கொடுக்க வேண்டும்.அப்டேட் கொடுத்தால் மட்டுமே புதிய சுற்று கவுன்சிலிங்கில் மாணவர்களால் பங்கேற்க முடியும்.கோர்ஸ் இந்த அப்டேட் நடைமுறையை அனைவருக்கும் புரியும் விதத்தில் பிராந்திய மொழிகளில் வெளியிடப்படவில்லை.இதன் காரணமாக பாடப்பிரிவுகளுக்கு அப்டேட் கொடுக்க தெரியாமல் கடைசி நேரத்தில் மாணவ மாணவிகள் சென்டாக்கிடம் கெஞ்சி வருகின்றனர்.கடைசி நேரம்ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை தகவல் குறிப்பேடு பிராந்திய மொழிகளில் தரப்படும் என உறுதியளிக்கப்பட்டாலும், அதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் பேச்சளவில் மட்டுமே உள்ளது.ஏனெனில் கவுன்சிலிங்கிற்கு சில நாட்களுக்கு முன் மட்டுமே தகவல் குறிப்பேட்டிற்கு அரசு அனுமதியே தரப்படுகின்றது. இதன் காரணமாக பிராந்திய மொழிகளில் தகவல் குறிப்பேடு ரெடி செய்ய போதிய கால அவகாசம் இருப்பதில்லை.இந்த ஆண்டாவது கவுன்சிலிங் நடைமுறைகள் அனைத்தும் முன் கூட்டியே துவங்க வேண்டும்.குறைந்தபட்சம் மாணவர் தகவல் குறிப்பேட்டை முன் கூட்டியே தயார் செய்து பிராந்திய மொழிகளில் வெளியிட வேண்டும். இப்படி, கவுன்சிலிங் நடைமுறைகளை எளிமைப்படுத்தினால் கணினி கலந்தாய்வு புதுச்சேரியில் வெற்றிப்பெற்று, இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்