மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கு புதிய பஸ்
விருதுநகர்: விருதுநகரில் அரசு மருத்துவக்கல்லுாரி மாணவர்கள், அரசு மருத்துவமனைக்கு எளிதாக சென்று வர சி.எஸ்.ஆர்., நிதியின் கீழ் ரூ.25 லட்சத்தில் புதிய பஸ் மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி வகுப்புகள் 2021 முதல் துவங்கப்பட்டு தற்போது 450 மாணவர்கள் படிக்கின்றனர். 2ம், 3ம் ஆண்டு மாணவர்கள் மருத்துவமனைக்கு தினமும் பயிற்சிக்காக 12 கி.மீ சென்று வர வேண்டி உள்ளது. மாணவர்கள் பாதுகாப்பாகவும், குறித்த நேரத்திற்கு சென்று வருவதற்கும், மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் பஸ் வசதி வேண்டி, மாவட்ட நிர்வகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.இந்நிலையில் சி.எஸ்.ஆர்., நிதியின் கீழ் வட்டார போக்குவரத்து அலுவலம் மூலம் ரூ.25 லட்சத்தில் புதிய பஸ் வாங்கி, கலெக்டர் ஜெயசீலன் மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்.மருத்துவக்கல்லுாரி டீன் சீதாலட்சுமி, துணை முதல்வர் அனிதா, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.