உள்ளூர் செய்திகள்

மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் ராஜினாமா

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் குமார் மே 14 முதல் ராஜினாமா செய்வதாக கவர்னர் ரவிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.இப்பல்கலையில் 2022 ஏப்., 1ல் துணைவேந்தராக இவர் பதவியேற்றார். பல்கலையில் நிதி நெருக்கடி, விதி மீறி பதவி உயர்வு, சம்பளம் வழங்க முடியாமை உள்ளிட்ட பிரச்னைகள் எழுந்தன. அதேநேரம் இருதய கோளாறு உள்ளிட்ட உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்தார்.இந்நிலையில் ஏப்., 30ல் தமது பதவியை ராஜினாமா செய்வதாக கவர்னர் ரவிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், உடல் நிலை காரணமாக மே 14 முதல் துணைவேந்தர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார். பதவிக் காலம் முடிய இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில் இவரது ராஜினாமா சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்