உள்ளூர் செய்திகள்

ஆசிரியர்களை ஏமாற்றுகிறது தி.மு.க., அரசு: ராமதாஸ்

சென்னை: பேச்சு என்ற பெயரில் ஆசிரியர்களை ஏமாற்றுகிறது தி.மு.க., அரசு' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.பழைய ஓய்வூதிய திட்டம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டிட்டோஜாக் எனப்படும் தமிழக துவக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு, ஒருநாள் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, 15 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுடன் பேச்சு நடத்துவதாகக் கூறி, அரசு ஏமாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது.மத்திய அரசு, புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக,ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தமிழக அரசோ, பழைய ஓய்வூதியக் கோரிக்கையை பரிசீலிக்கக்கூட முன்வரவில்லை. ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் தமிழக அரசு எந்த அளவுக்கு கிள்ளுக்கீரையாக மதிக்கிறது என்பதற்கு, இதுவே எடுத்துக்காட்டு.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்