உள்ளூர் செய்திகள்

ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயற்குழு கூட்டம் மாநில துணை தலைவர் செல்வம் தலைமையில் நடந்தது.வட்டார செயலாளர் யோகராஜ் வரவேற்றார். மாவட்ட செயலாளார் பொற்செல்வன், நிர்வாகிகள் பாலமனோகரன், கருப்பசாமி, மகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நவ.,10 விழுப்புரத்தில் அலுவலக கட்டட திறப்பு விழா மற்றும் கல்வி பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வது, நீண்டகால கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். பொருளாளர் அன்பழகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்